அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்

கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம்.

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் :

அல்லிப்பூ ⇔ செல்வம் பெருகும்.

பூவரசம்பூ ⇔ உடல் நலம் பெருகும்.

வாடமல்லி ⇔ மரணபயம் நீங்கும்.

மல்லிகை ⇔ குடும்ப அமைதி.

செம்பருத்தி ⇔ ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு.

காசாம்பூ ⇔ நன்மைகள்.

அரளிப்பூ ⇔ கடன்கள் நீங்கும்.

அலரிப்பூ ⇔ இன்பமான வாழ்க்கை.

ஆவாரம் பூ ⇔ நினைவாற்றல் பெருகும்.

ரோஜா பூ ⇔ நினைத்தது நடக்கும்.

மருக்கொழுந்து ⇔ குலதெய்வம் அருள்.

சம்பங்கி ⇔ இடமாற்றம் கிடைக்கும்.

சங்குப்பூ (வெள்ளை) ⇔ சிவப்பூஜைக்கு சிறந்தது.

சங்குப்பூ (நீலம்) ⇔ விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

மனோரஞ்சிதம் ⇔ குடும்ப ஒற்றுமை

தாமரைப்பூ ⇔ செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.

நாகலிங்கப்பூ ⇔ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்.

முல்லை பூ ⇔ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

நித்திய கல்யாணி பூ ⇔ முன்னேற்றம் பெருகும்.

தங்க அரளி (மஞ்சள் பூ) ⇔ குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.

பவள மல்லி ⇔ இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

அரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.

கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் உண்டாகும் நன்மைகள் கிடைக்காது.

பூஜைக்கு சிறப்பான பூக்கள் :

திருமாலுக்கு ⇔ பவளமல்லி, மருக்கொழுந்து துளசி.

சிவன் ⇔ வில்வம், செவ்வரளி.

முருகன் ⇔ முல்லை, செவ்வந்தி, ரோஜா.

அம்பாளுக்கு ⇔ வெள்ளை நிறப்பூக்கள் ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.

ஆகாத பூக்கள் :

விநாயகருக்கு ⇔ துளசி.

சிவனுக்கு ⇔ தாழம்பூ.

அம்பாளுக்கு ⇔ அருகம்புல்.

பெருமாளிற்கு ⇔ அருகம்புல்.

பைரவர் ⇔ நந்தியாவட்டை.

சூரியனுக்கு ⇔ வில்வம் ஆகியவை பூஜைக்கு ஆகாதவை.

Posted in மட்றவை and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *