விநாயகர் என்பதன் பொருள் யாது

நாயகர்-தலைவர் விநாயகர்- மேலான தலைவர். தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவர்; என்று பொருள் “ஓம் அநீஸ்வராய நம:” என்னும் மந்திரத்திற்கு- தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக –ஏக –நாயகம் =அஃதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கின்ங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின்  விக்னேசுவரர் என்றும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் […]

zzzzzzzzzzzzzzzzzzz

விநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன

ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஸ்ரீ ஷோடச லக்ஷ்மி மூல மந்திரம்

மஹாலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மி ஏஹி ஏஹி ஸர்வ ஸௌபாக்கியம் தேஹிமே நமஹ /ஸ்வாஹா தனலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் தனலக்ஷ்மீ ஏஹி ஏஹி மஹ்யம் ஹிரண்ய தாபய தாபய நமஹ / ஸ்வாஹா தாண்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தாண்யலக்ஷ்மியை  தாண்யம் தேஹி தேஹி நமஹ / ஸ்வாஹா ஸந்தானலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸந்தானலக்ஷ்ம்யை ஸந்தான ஸம்ருத்திம் குரு குரு நமஹ / ஸ்வாஹா ஸௌபாக்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

வில்வத்தின் சிறப்புகள்

வில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது

வருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.

zzzzzzzzzzzzzzzzzzz

மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு

1]தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் […]

zzzzzzzzzzzzzzzzzzz

ரத சப்தமி நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராடுவது ஏன்

தை மாதம் வளர்பிறை சப்தமி நாளில் சூரியபகவான் உண்டானார். அவர் பிறந்த திதியான ஏழு (சப்தமி) என்பதில் அவருக்குப் பிரியம் அதிகம். அவர் உடலை வடிவமாக்கிப் பிடித்த பொழுது அது சிந்தின இடத்தில் எருக்கஞ் செடி உண்டானது. எனவேதான் சூரியன் வழிபடுகினற நாளாகிய (சூரியபூஜை) ரதசப்தமி நாளில் எருக்கன் இலைகளை 7ஐ தலைமீதுவைத்து அப்பெருமானைத் துதித்து நீராடினால் ஏழு ஜன்ம பாவங்களும் அகலும் என்பது சமய மரபு-

zzzzzzzzzzzzzzzzzzz

பசுவும் புண்ணியங்களும்

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். * பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். * பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர். * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கால பைரவாஷ்டகம் (பொருள் விளக்கத்துடன்)

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம் 1. தேவராஜ – ஸேவ்யமான – பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர – மிந்துசேகரம் – க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த – வந்தினம் திகம்பரம் காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் […]

zzzzzzzzzzzzzzzzzzz