11-12-2023 ராசி பலன்

*_கார்த்திகை: 25_*

     *_திங்கள்-கிழமை_*

            *_11- 12- 2023_*

       *_ராசி- பலன்கள்_*

👉Web site:-http://www.MBarchagar.com

👉Telegram Channel:-https://t.me/Shiv_devotees

👉 WhatsApp channel:- https://whatsapp.com/channel/0029VaAS0MyE50UgjYL5y30w

👉Whatsapps Group:-https://chat.whatsapp.com/J0Q6lZIrV23IL2VGTtkj7r

👉 *12 ராசிகளின் பலன்களை கான*

                          *Click here👇🏻*

11-12-2023 ராசி பலன்

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

மாமியார் வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயங்களைத் தவிர்க்கும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

⭐️பரணி : அனுபவம் கிடைக்கும்.

⭐️கிருத்திகை : பதற்றமின்றி செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂_*

திருத்தலம் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பேச்சுத்திறமைகளின் மூலம் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஓய்வு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கைகூடும்.

⭐️ரோகிணி :  அனுகூலமான நாள்.

⭐️மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*

கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். மருத்துவம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

⭐️திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.

⭐️புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர் கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

⭐️பூசம் : பொறுமை வேண்டும்.

⭐️ஆயில்யம் : வருமானம் மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁_*

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். வாகனப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய துறைகள் சார்ந்த தேடல் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்குத் தெளிவை ஏற்படுத்தும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️மகம் :  மகிழ்ச்சியான நாள்.

⭐️பூரம் : ஆதாயம் உண்டாகும்.

⭐️உத்திரம் : தெளிவு பிறக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*

உடன்பிறந்தவர்களைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் அகலும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️அஸ்தம் : மந்தநிலை குறையும்.

⭐️சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖_*

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்நடைகளால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிலிருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்.

⭐️சித்திரை : தீர்வு கிடைக்கும்.

⭐️சுவாதி : ஆதாயம் மேம்படும்.

⭐️விசாகம் : வரவுகள் கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂_*

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகள் தாமதமாக நிறைவுபெறும். வீண் விவாதங்களைக் குறைத்துக் கொள்வதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அசதிகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

⭐️அனுஷம் : புரிதல் ஏற்படும்.

⭐️கேட்டை : நிதானம் வேண்டும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹_*

எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். மாணவர்களுக்குப் பாடங்களில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️மூலம் : செலவுகள் உண்டாகும்.

⭐️பூராடம் : கட்டுப்பாடு வேண்டும்.

⭐️உத்திராடம் : குழப்பமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴_*

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கால்நடை குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பயணம் குறித்த எண்ணங்கள் ஈடேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாகக் குறையும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.

⭐️திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

⭐️அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*

தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

⭐️சதயம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*

தனித்துவமாகச் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

⭐️உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

⭐️ரேவதி : செல்வாக்கு மேம்படும்.

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*