➠ பரபரப்பாக பறந்து கொண்டு இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம். அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம்.
➠ பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான், தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம். இது மகிழ்ச்சியான உண்மை ஆகும்.
தோப்புக்கரணம் என்பது தண்டனையா :
➠ தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும், அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
➠ கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான்.
➠ தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை சம்ஹரம் செய்ய புறப்பட்டார்.
➠ விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர்கபெறுமான் முகாசுரனை சம்ஹாரம் செய்துவிட்டார்.. கஜமுகாசுரன் அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் பலன்கள் :
➠ நமது முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தையும் வைத்திருந்தனர். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
➠ காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.
➠ உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள ‘சோலியஸ்” எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது.
➠ இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும். தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து செய்தாலே, நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.
➠ நம் முன்னோர்களோ வழிபாட்டின் ஒரு பகுதியாக இதை வைத்துள்ளனர். இதன் மூலம் நாம் விநாயகப் பெருமானிடம் ஆசியும் அருளும் பெறலாம். தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பெறலாம்.