பசுவும் புண்ணியங்களும்

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
* `மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.
* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
* கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.
* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

Posted in மட்றவை and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *