நாயகர்-தலைவர்
விநாயகர்- மேலான தலைவர். தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவர்; என்று பொருள் “ஓம் அநீஸ்வராய நம:” என்னும் மந்திரத்திற்கு- தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக –ஏக –நாயகம் =அஃதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள்.
வழிபடுவோரின் விக்கின்ங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின் விக்னேசுவரர் என்றும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் வணங்கப்படுகிறார்……..