பெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது.
கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது.
கணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது)
தலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது.
இரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது.
பகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும்.
திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.