நமது உடலிலுள்ள வாயுக்குப் பிராணன் என்று பெயர்.
அதை அடக்குவது பிராணாயாமமாகும். பின்னிரண்டு மாத்திரைக் காலம் வாயுவை அடக்குவது மந்தமாகும். இருபத்துநான்கு மாத்திரைக்காலம் அடக்குவது மத்யமாகும். முப்பத்தாறு மாத்திரைக்காலமடக்குவது உத்தமமாகம். உள்ளேயிருக்கும் மூச்சை ஒருமூக்கால் விட்டுக்கொண்டே ஒர் பிராணாயாமம் செய்ய வேண்டும். அது ரேசகமெனப்படும். பிராணனை அடக்கிக் கொண்டே ஓர் பிராணாயாமம் செய்தல் வேண்டும். அது கும்பகமெனப்படும். மற்றோர் மூக்கால் வாயுவை உள்ளே இழுத்துக்கொண்டே ஓர் பிராணாயாமம் செய்வது பூரகமெனப் படும். பூரகம் கும்பகம் ரேசகம் என்ற முறையில் மந்த மத்ய உத்தம பிராணாயாமங்களைச் செய்து பயிற்சி செய்தால் பல வகை நன்மைகளைப் பெறலாம்