Monthly Archives: April 2017
இறைவனை வழிபடும் முறைகள்
இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் – ”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்” ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க […]
zzzzzzzzzzzzzzzzzzzஉருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது
உருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்
zzzzzzzzzzzzzzzzzzzஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும்
கிழக்கு,மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும்: தெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். (தன் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சந்நிதியும் இருத்தல் கூடாது. கொடிமரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்கினால் அங்கு எத்தெய்வச் சந்நிதியும் இருக்காது. எனவேதான் இங்குமட்டுமே வீழ்ந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் விதித்துள்ளனர்) ஆண்கல் பஞ்சாங்க நமஸ்காரம் பெண்கல் மண்டி இட்டு நமஸ்கரிக்க வேண்டும் சுபம் சுபம் சுபம்
zzzzzzzzzzzzzzzzzzzஆடி,தை மாத்த்திய வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு விசேஷாமாகச் சொல்லப்படுவதற்கு உரிய காரணம் யாது
தக்ஷிணாயனம், உத்தராயணம் என்னும் இவ்விரு அயனங்களுமே புண்ணியகாலங்கள் எனக் கொள்ளப்படுகின்றன. அயன ஆரம்ப காலமாகவுள்ள இவ்விரு மாதங்களும் சிறப்புடையவை பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய சிறந்த நாள். இதனோடு அயனத்தின் ஆரம்பம் என்னும் சிறப்பும் சேருகின்றதால் இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமுடையனவாகக் கருதப்படுகின்றன. இம்முறை பற்றியே இவ்விரு மாதங்களிலும் வரும். அமாவாசை, கிருத்திகை நாள்களும் மிகவும் விசேஷமுடையனவாக்க் கொள்ளப்படுகின்றன. (தை, அமாவாசை, தைக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை)
zzzzzzzzzzzzzzzzzzzஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்
1 ஆதிலக்ஷ்மி ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி சம்த்ர ஸஹொதரி ஹேமமயே | முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி மம்ஜுல பாஷிணி வேதனுதே || பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே | ஜய ஜயஹே மதுஸூதன காமினி ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 தான்யலக்ஷ்மி அயிகலி கல்மஷ னாஶினி காமினி வைதிக ரூபிணி வேதமயே | க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே || மம்களதாயினி அம்புஜவாஸினி […]
zzzzzzzzzzzzzzzzzzzஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள் அவை 1.அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். 2.ருரு பைரவர் […]
zzzzzzzzzzzzzzzzzzzஅறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை எவை
1 அக்ஷரவிலக்கணம் (எழுத்தியல்பு) 2 லிகிதம் (எழுதும் ஞானம்) 3 கணிதம் (எண்நூல்) 4 வேதம் (முதல் நூல்) 5 இதிகாசம், புராணம் (பூர்வ கதை) 6 வியாகரணம் (இலக்கணம்) 7 சோதிட சாஸ்திரம் (வான நூல்) 8 தரும சாஸ்திரம் (அற நூல் ) 9 நீதி சாஸ்திரம் (நீதி நூல்) 10 யோக சாஸ்திரம் (யோக நூல்) 11 மந்திர சாஸ்திரம் (மந்திர நூல்) 12 சகுன சாஸ்திரம் (நிமித்த நூல்) 13 சிற்ப […]
zzzzzzzzzzzzzzzzzzzஅரசமரமும் வேம்பும் உள்ளா இட்த்தில் விநாயகர் ஆலய முள்ளது. அதை பிரதக்ஷிணம் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளதா யார் செய்வது
இந்துக்கள் யார் வேண்டுமானாலும் பிரதக்ஷிணம் செய்யலாம். ஸ்நானம் செய்து மடியாக, ஆண்கள் விபூதியிட்டு, பெண்கள் குங்கும்மிட்டு காலை எட்டு மணிக்குள் ஏழு பிரதக்ஷிணமாவது செய்ய வேண்டும். எள், வெல்லம் நிவேதனம் செய்யலாம். சனிக்கிழமைகளில் மட்டும் அவசியம் பிரதக்ஷிணம் செய்வது நல்லது. காலை எட்டு மணிக்குப்பிறகு அரசமரத் தடிக்குப் போக்க்கூடாது.
zzzzzzzzzzzzzzzzzzzஅபிஷேகம் ஏன் செய்யப்படுகின்றது
நாம் உயிர் வாழக்கூடிய ஆத்மாக்கள் வாழ்வில் சுகமாக வாழ்வதற்கு பரமாத்மாவை வேண்டி கிரிகைகளால் வழிபாடு செய்கிறோம். கோயிலில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம். நிவேதனம், பூசை, விழா முதலியவை நடைபெற வேண்டும். சிவனுக்கு அபிஷேகத்தில் அதிக விருப்பம். மகாவிஷ்ணுக்கு அலங்காரத்தில் அதிக விருப்பம் அபிஷேகப் பொருள்களால் பரமனைக் குளிரச் செய்தால் நமது துயரமெல்லாம் நீங்கும்.
zzzzzzzzzzzzzzzzzzzஅபிஷேகக் காலத்தில் வலம் வந்து வணங்கலாமா
அபிஷேகக் காலத்தில் உட்பிராகாரத்தில் வலம் வந்து வணங்கலாகாது. அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடைபெறும்போதும், திரை போட்டிருக்கும்போதும், சுவாமியைத் தரிசன்ம் செய்யலாகாது.
zzzzzzzzzzzzzzzzzzz