Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
வருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும்.
கசப்புக்கு இருப்பிடம் வேம்பு.
இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு.
வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.