தக்ஷிணாயனம், உத்தராயணம் என்னும் இவ்விரு அயனங்களுமே
புண்ணியகாலங்கள் எனக் கொள்ளப்படுகின்றன.
அயன ஆரம்ப காலமாகவுள்ள இவ்விரு மாதங்களும் சிறப்புடையவை பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய சிறந்த நாள். இதனோடு அயனத்தின் ஆரம்பம் என்னும் சிறப்பும் சேருகின்றதால் இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமுடையனவாகக் கருதப்படுகின்றன. இம்முறை பற்றியே இவ்விரு மாதங்களிலும் வரும். அமாவாசை, கிருத்திகை நாள்களும் மிகவும் விசேஷமுடையனவாக்க் கொள்ளப்படுகின்றன. (தை, அமாவாசை, தைக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை)