பிருங்கி என்னும் மகரிஷி பெருமானை வணங்க வந்த போது அவர் அம்மையபராக இருந்த கோலங்கண்டு வண்டு உருவங்கொண்டு அவர்களுக்கு இடையிற் புகுந்து இறைவனை மட்டும் வலம் வந்தார். இதைக்கண்ட உமாதேவி இறைவனை விரதமிருந்து நோற்று அவருடம்பிலிருந்து பிரிக்கமுடியாதவாறு இடப்பாகத்தில் ஒன்றியிருக்கும் பேற்றினைப் பெற்றார். இவ்வடிவமே அர்த்த நாரீசுவரராகும். இந்த நோன்பு விதமே கேதார கெளரி விரதம் எனப்படும்.
புரட்டாசி மாதம் வளர்பிறைல் தசமி திதி நாள் தொடங்கி, ஐப்பசிமாதம் தேய்பிறை அமாவாசை- தீபவளி வரை 21 நாள்கள் நாடொறும் இறைவனை வில்வர்சனை செய்து நாளுக்கொரு வகையாகப் பலகாரங்கள் நிவேதித்து இருபத்தோரு இழையில் ஒரு கயிற்றை முறுக்கி, அதில் நாளுக்கு ஒரு முடிவீதம் 21 முடிகள் முடிந்து கடைசி நாளில் அக்கயிற்றைக் கையில் அணிண்து கொள்வர். இதுவே இந்நோன்பு முறை. பிற்காலத்தில் 21 நாள்கள் இருக்கும் முறைமாறி இவ்விரதம் ஒரு நாள் அளவேயிருக்கும் முறைக்கு வந்துவிடட்து. இதனால் 21 நாள்களிலும் செய்தது போன்ற பாவனையாக 21 வகையான பலகாரங்களை நிவேதிப்பது என்ற முறைவந்த்து. இம்முறையும் மாறி, இன்று ஒருவிதமான் பலகாரத்தையே இனிப்பையே 21 என்ற எண்ணிக்கையில் வைத்து நிவேதிக்கும் வழக்கம் வந்து விட்டது. இம்முறையில் தான் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ இவற்றின் எண்ணிக்கையும் நடைமுறைக்கு வரலாயிற்று. (பண்டைநாளில் இனிப்பு என்னும்போது அதிரசம் என்னும் பண்டமே நடைமுறைடில் தெரிந்தால் இருந்ததால் அப்பல காரமே இன்றும் வழக்கத்தில் கொள்ளப்படுகிறதி)`
(அதி-ரசம்=மேலான இனிப்புடையது).