Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
காசியைப் போல் கயாவும் முக்கியத் தலமாகும், யாத்திரை புரிவோர் எல்லாத் தலங்களுக்கும் போக இயலாதவர்கள் பிரயாகை, காசி, கயை என்ற இந்த மூன்றையும் தவறாமல் சேவிக்க. அதாவது பிரயாகையில் சவுளஞ் செய்து கொள்ள (முடி வாங்கிக் கொள்ள) வேண்டும்; காசியில் விசுவநாதரை நன்கு வணங்க வேண்டும்; கயையில் பிதிர்களுக்குப் பிண்டம் போட வேண்டும்.
கயையில் பிண்டந்தான் பிரதானம்.
கயாசுரன் என்பவன் சிறந்த நாராயண பக்தன். அவன் இருந்து தவஞ்செய்து நற்கதி பெற்றதனால் இத்தலம் தூய்மை பெற்றது. அதனால் கயா என்று அவன் பெயரைப் பெற்றது. பல்குணி நிதி ஓடுகின்றது. வடக்கு நோக்கி ஒடும் இந் நதியில் எல்லாத் தீர்த்தங்களும்; எல்லாத் தலங்களும் (கயாவிலும்) அடங்குகின்றன என்பது மரபு.
பல்குணி நதிக்கரையில் விஷ்ணு பாதம் உளது. விஷ்ணு பாதக்கோயிலுக்கு
1½ கி.மீ, தொலைவில் அட்சய வடம் என்ற பழமைமிக்க ஆலவிருட்சம் உள்ளது. அதன்கீழ் நம்மிடம் உள்ள தீமைகளில் சிலவற்றைத் தள்ளிவிட வேண்டும். இந்த வழக்கத் திற்குப்பதிலாக இப்போது இலை காய்கனிகள் இவைகளில் ஒன்றை விட்டு விடுகின்றார்கள்.