Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
ஆலய ஆகமவிதிப்படி கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் நந்தி இருக்கும் இட்த்திற்கும் இடையில் நின்று வணங்குதல் கூடாது. காரணம், ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னல் உள்ள நந்தி, மூக்கிலிருந்து விட்ம் மூச்சுக் காற்றினால் தான் கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவருக்கு உயிர்நிலை தருவதாக்க் கருத்து, இதனால்தான் மூலவரின் வயிற்றுப் பகுதி-கொப்பூழ் (தொப்புள்) பாகத்தை உயிர்நிலையாகக் கொண்டு அந்த இட மட்ட்த்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு ஆலயங்களில் நந்தி அமைக்கப் படுகிறது. இம்மூச்சுக் காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவதும், இங்கு நின்று, வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்றனர். சந்நிதி விட்டு அகன்று நிற்றல் என்ற பழக்கமும் இதன் விளைவாக வந்த்தே, இன்று பிறருக்கும் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதாலும் இப்பழக்கம் கைக்கொள்ளப்படுகிறது.