தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும்.

பித்ரு தோஷம் – தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்து போன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம். ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தால், அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவதால் மறுபிறவியில் அவர்கள் பித்ரு தோஷ ஜாதகத்துடன் பிறக்கிறார்கள். அதேபோல் யார் ஒருவர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கொடுமை செய்கிறார்களோ அவர்களும் மறுபிறவியில் பித்ரு தோஷத்துடன் பிறக்கிறார்கள். கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷ ஜாதக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிக தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமலும் இருக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது. வெறுப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை கசக்கும். ஒரு சிலருக்கு பல முறை திருமணமும் கலப்பு திருமணமும் நடைபெறும். ஒரு சில பெற்றோர்களுக்கு தெரியாமல் இரகசிய காதல் திருமணம் செய்து கொள்வர். பித்ருக்கள் நமக்கு கொடுக்கும் சாபம் கடவுளிடம் நமக்கு கிடைக்கும் வரங்கள் அனைத்தையும் பித்ரு தேவதைகள் நம்மை அனுபவிக்கவிடாது. பித்ரு தோஷம் உள்ளவரல் பரிகாரம் செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும் பித்ருவிற்கு பரிகாரம் செய்யாமல் பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகாது. ஆடி அமாவாசை புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வது அவசியம். திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பித்ரு திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும். அமாவாசை அவிட்ட நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிவபெருமான் “நாவாய் முகுந்தன்” என்று பெயர் கொண்டு அருள்பாலிக்கும் இத்தளம் பித்ரு பூஜை செய்ய சிறந்த தளமான கருதப்படுகிறது. இத்தளம் கேரளாவில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தல விருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அமாவாசையன்று அன்னம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு பித்ரு பூஜை செய்தால் நல்ல பலன் அடையலாம். நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. பித்ருக்களுக்கு தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்களை செய்வதை விட மேலானதாகும். ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்., அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பனங்களுக்கு மிகுந்த பலன் உண்டு. அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். ஒரு வருடம் நாம் பித்ரு பூஜை செய்ய தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களில் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும். திருவாதிரை, புனர்பூச நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்திபடுத்த முடியும்.

Click here

Posted in மட்றவை.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *