Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
நமச்சப்தமாத்ரே ஸதாதுஷ்டதேவம்
நதாநாம்முனீனாம் ஹ்ருதிஸ்தம்கிரீசம்,
நரேந்த்ராதிபத்யம் ததந்தமவஹந்தம்
நமச்சிவாயேதி பதாபிதம்ஸ்துவே.
‘நம’ என்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குமின்றமுனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும்வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்துஸ்துதி செய்கின்றேன்.
மஹாதேவமீசம் மஹாவாக்ய்கேஹம்
மஹாத்மானமேகம் மஹத்தத்வமூர்த்திம்
மஹாருத்ரயஜ்ஞை: ஸதாஸ்தூயமானம்
நமச்சிவாயேதி பதாபிதம்ஹுவே.
மஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி,மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன்
.
சிவம்சாந்தமூர்த்திம் சிஷ்டைகபூஜிதம்
ச்ரிதாங்க்ரிஸ்வபக்தான் ஸதைவாபிரக்ஷம்
ச்ரியம்ஸந்ததானம் சிலாரூபமாத்யம்
நமச்சிவாயேதி பதாபிதம்நமே.
சிவன், சாந்தமூர்த்தி, சிஷ்டர்களால் பூஜிக்கப்ப்டுபவர், தனது பாதத்தையண்டினவர்களை எப்போதும் ரக்ஷிப்பவர், ஐச்வர்யட்தைக் கொடுப்பவர்,சிலாரூபமாகத் தோன்றினாலும் ஆதிரூபமில்லாதவர். இத்தகையசிவபெருமானை ‘நமச்சிவாய’ என்று சொல்லி வணங்குவேன்.
வாக்தேவதாஸ்தோத்ர த்ருப்தம்ச்ருதேர்கிராம்
பாரேவஸந்தம்யோகி ஹ்ருத்த்யேயமூர்த்திம்,
வகாராதிபீஜம் அம்ருதஸ்வரூபம்
நமச்சிவாயேதி பதாபிதம்ப்ருவே.
வாக்தேவதையான ஸரஸ்வதியின் ஸ்துதியினால் திருப்தி அடைந்தும்,வேதத்தின் முடிவில் வஸித்தும், யோகிகளின் ஹ்ருதயத்தினால் தியானம்செய்யப்பட்டும், ‘வ’ என்ற அம்ருத பீஜமாக இருக்கும் சிவபெருமானை‘நமச்சிவாய’ என்று கூறுவேன்.
யம்தேவதேவம் நமச் சப்தபூர்வம்
சிவாயேதிமந்த்ரம் தத்சிவாகாரமேதி,
சிதானந்தந்ருத்யம் ஸுதாதாத்ருசக்திம்
நமச்சிவாயேதி பதாபிதம்பஜே.
எந்த தேவதேவனை ‘நம’ என்று ஆரம்பித்து ‘சிவாய’ என்று மந்திரம்சொன்னவுடன் சிவஸ்ரூமாக ஆகி ஆனந்த நர்த்தனஞ் செய்யும்அம்ருதசக்தியைக் கொடுக்குமோ அந்த ‘நமச்சிவாய’ மந்திரத்தை பஜிக்கிறேன்.