துளசி பூஜை செய்யும் முறை


Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106

முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ஸ்வாகதம் என்றும் 3 முறை கூறவும்.
இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.
அடுத்து, தேங்காய் பழம், தாம்பூலம், பால் பாயாசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவக்குங்கள்.
ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:- என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ஓம் கஜானனாய நம: என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.
அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், கணவன்-மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:
ஓம் விஸ்வ பூஜிதாயை நம:
ஓம் விஷ்ணுப்ரியாயை நம:
ஓம் தேவ மூலிகாயை நம:
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:
ஓம் சவுபாக்ய நிலயாயை நம:
ஓம் விஷ்ணு கேசின்யை நம:
ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:
ஓம் விஸ்வ பாவணாயை நம:
ஓம் யாக பூஜிதாயை நம:
ஓம் தான ப்ரதாயின்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:
ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:
அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து மூன்றுமுறை தன்னையே சற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள்
ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ
விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ
புஸ்பஸாரா நந்தனீச
துளசீ க்ருஷ்ண ஜீவனீ
ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸ
ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!
இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,
ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே
க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்
என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி
தந்நோ துளசீ ப்ரசோதயாத்
யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா
யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்த்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

துளசி ஆராதனை துதி!

ஓம் தீத் தொளியே தீருவே துளசியம்மா
பாபத்தைத் தீர்க்கும் பரிவே துளசியம்மா
கோவிந்தன் உட்பொருளாய்க் கூடிக் கலந்த அம்மா
மாவிந்தை உன்றன் மகிமைச் சிறப்பு அம்மா…!
செவ்வாய் திருவெள்ளி செல்வி தழைக்க வந்தாய்
உய்வாக எந்நாளும் உரிமையில் நீ இருப்பாய்
கைவாய்க் கனிவதென்ன கருத்தொன்றிப் போன அம்மா
கண்ணன் மனது வைத்தால் கனிந்துருக வாராயோ!
நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!
நாடி விளக்கு வைத்தோம் நறு நெய்யும் ஊற்றி வைத்தோம்
நாயகியே பாருமம்மா நலமே துளசியம்மா
பாடித் துதிக்கின்றோம் பரதேசம் போகாதே
பார்த்து அருள்புரிக பண்பே துளசியம்மா

Posted in அம்மன் and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *