ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து விடுகிறான். அவனை நீங்கள் தான் சம்ஹாரம் செய்யவேண்டும். தேவேந்தினும், நானும் அவன் பக்கத்தில் போகமுடியாமல் ஓடி வந்து விட்டோம்” என்றார். பிள்ளையார் உடனே எழுந்தார். அவருடன் கணங்களும் கிளம்பின. அனலாசுரன் இருக்கும் இடம் வந்தார். பிள்ளையாருக்கும் அனலாசுரனுக்கும் பெரும் போர் மூண்ட்து. சண்டையில் அனலாசுரன் தன் வாயிலிருந்து நெருப்பாகக் கக்கி பிள்ளையாரின் படைகளைப் பொசுககினான். ஏனென்றால் நெருப்பாக எரியும்படி அவன் வரம் பெற்றிருந்தான். அதைக்கண்ட பிள்ளையாருக்கு அசாத்தியக்கோபம் வந்து விட்டது. எத்தனை நேரம் சண்டை செய்தும் அசுரனை ஜெயிக்க முடியாமல் போகவே அவர் அனலாசுரனைத் துக்கி அப்படியே விழுங்கிவிட்டார்.
வயிற்றுக்குள் போன அனலாசுரன் சும்மா இருக்கவில்லை. பிள்ளையாரையும் தகிக்க ஆரம்பித்தான். பிள்ளையார் “எரிகிறதே, எரிகிறதே” என்று குதிக்கத் தொடங்கிவிட்டார். அதைக்கண்ட தேவர்கள் குடம் குடமாகக் கங்கை நீரினால் அவருக்கு அபிஷேகம் செய்தார்கள். ஆனால் எரிச்சல் அதிகம் ஆயிற்றே தவிர குறையவில்லை. பனிக்கட்டியைக் கொண்டு வந்து தலைமீது வைத்தார்கள். அப்பொழுதும் அடங்கவில்லை. சந்திரனுடைய நிலவைப் பொழிந்தார்கள். அப்பொழுதும் அடங்கவில்லை. அப்பொழுது ஒரு ரிஷி கைநிறைய அறுகம் புல்லைக் கொண்டு வந்து, பிள்ளையாரின் தலை மீது வைத்தார். உடனே எரிச்சல் கப்பென்று அடங்கி விட்டாது. அனலாசுரன் பிள்ளையாரின் வயிற்றிலேயே ஜீர்ணம் ஆகிவிட்டான்.
பிள்ளையாருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. “இன்று முதல் என் அருள் வேண்டுமென்பவர்கள் அறுகம் புல்லினால்தான் என்னைனர்ச்சிக்க வேண்டும்” என்று சொன்னார். அன்றுமுத பிள்ளையருக்கு அறுகம்புல்லினால் அர்ச்சனை தொடங்கியது. பிள்ளையாருக்கு அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்தால். நல்ல கல்வியும், செல்வமும், நீண்ட ஆயுளும் பிள்ளையார் அருள் செய்வார்……………
விநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன
Posted in விநாயகர்.