ஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி

1 ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

 

ஓம் ஆதிபராசக்தியே போற்றி

ஓம் அபிராமியே போற்றி

ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே

ஓம் அம்பிகையே

ஓம் ஆசைகளை அறுப்பாய்

ஓம் அன்பின் உருவே

ஓம் ஆபத்தைத் தடுப்பாய்

ஓம் அச்சம் தீர்ப்பாய்

ஓம் ஆனந்தம் அளிப்பாய்  10

ஓம் அல்லல் தீர்ப்பாய்

ஓம் ஆற்றல் தருவாய்

ஓம் இமய வல்லியே

ஓம் இல்லறம் காப்பாய்

ஓம் இரு சுடர் ஒளியே

ஓம் இருளை நீக்குவாய்

ஓம் ஈசனின் பாதியே

ஓம் ஈஸ்வரியே

ஓம் உமையவளே

ஓம் உலகத்தை காத்திடுவாய்  20

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய்

ஓம் உற்சாகம் அளிப்பாய்

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய்

ஓம் ஊக்கம் அளிப்பாய்

ஓம் என் துணை இருப்பாய்

ஓம் ஏக்கம் தீர்ப்பாய்

ஓம் எம்பிராட்டியே

ஓம் ஏற்றம் அளிப்பாய்

ஓம் ஐமுகன் துணையே

ஓம் ஐயுறவு தீர்ப்பாய் 30

ஓம் ஒளிர்வு முகத்தவளே

ஓம் ஒச்சம் அளிப்பாய்

ஓம் கங்காணியே

ஓம் காமாட்சியே

ஓம் கடாட்சம் அளிப்பாய்

ஓம் காவல் தெய்வமே

ஓம் கருணை ஊற்றே

ஓம் கற்பூர நாயகியே

ஓம் கற்பிற்கரசியே

ஓம் காமகலா ரூபிணியே  40

ஓம் கிரிசையே

ஓம் கிலியைத் தீர்ப்பாய்

ஓம் கீர்த்தியைத் தருவாய்

ஓம் கூர்மதி தருவாய்

ஓம் குவலயம் ஆள்பவளே

ஓம் குலத்தைக் காப்பாய்

ஓம் குமரனின் தாயே

ஓம் கற்றம் பொறுப்பாய்

ஓம் கொற்றவையே

ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் 50

ஓம் கோமதியே

 

ஓம் கோனரிவாகனம் கொண்டாய்

ஓம் சங்கரியே

ஓம் சாமுண்டீஸ்வரியே

ஓம் சந்தோஷம் அளிப்பாய்

ஓம் சாந்த மனம் தருவாய்

ஓம் சக்தி வடிவே

ஓம் சாபம் களைவாய்

ஓம் சிம்ம வாகினியே

ஓம் சீலம் தருவாய்   60

ஓம் சிறுநகை புரிபவளே

ஓம் சிக்கலைத் தீர்ப்பாய்

ஓம் சுந்தர வடிவழகியே

ஓம் சுபிட்சம் அளிப்பாய்

ஓம் செங்கதிர் ஒளியே

ஓம் சேவடி பணிகிறேன்

ஓம் சோமியே

ஓம் சோதனை தீர்ப்பாய்

ஓம் தண்கதிர் முகத்தவளே

ஓம் தாயே நீயே   70

ஓம் திருவருள் புரிபவளே

ஓம் தீங்கினை ஒழிப்பாய்

ஓம் திரிபுரசுந்தரியே

ஓம் திரிசூலம் கொண்டாய்

ஓம் திசையெட்டும்புகழ்கொண்டாய்

ஓம் தீரம் அளிப்பாய்

ஓம் துர்க்கையே அம்மையே

ஓம் துன்பத்தை வேரறுப்பாய்

ஓம் துணிவினைத் தருவாய்

ஓம் தூயமனம் தருவாய்  80

ஓம் நாரணியே

ஓம் நலங்கள் அளிப்பாய்

ஓம் நிந்தனை ஒழிப்பாய்

ஓம் நீதியினைக் காப்பாய்

ஓம் பகவதியே

ஓம் பவானியே

ஓம் பசுபதி நாயகியே

ஓம் பாக்கியம் தருவாய்

ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே

ஓம் பிழை தீர்ப்பாய்  90

ஓம் புகழினை அளிப்பாய்

ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா

ஓம் பொன்ஒளி முகத்தவளே

ஓம் போர் மடத்தை அளிப்பாய்

ஓம் மகிஷாசுரமர்த்தினியே

ஓம் மாதங்கியே

ஓம் மலைமகளே

ஓம் மகமாயி தாயே

ஓம் மாங்கல்யம் காப்பாய்

ஓம் மாதவன் தங்கையே  100

ஓம் மனக்குறை தீர்ப்பாய்

ஓம் மண்ணுயிர் காப்பாய்

ஓம் வேதவல்லியே

ஓம் வையகம் வாழ்விப்பாய்

ஓம் ஜெஜெய தேவியே

ஓம் ஜெயங்கள் அளிப்பாய்

ஓம் துர்க்காதேவியே

ஓம் போற்றி போற்றி போற்றியே108

Posted in அம்மன்.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *