நாம் ஏன் கோவிலுக்குப் போகணும்?

கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படுகின்றன. அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படுகின்றன. முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்.  சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் […]

zzzzzzzzzzzzzzzzzzz

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.?

அறிவியல் உண்மை.!!! அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

அரிய அபூர்வ தகவல்கள் இரகசியம்.ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், […]

zzzzzzzzzzzzzzzzzzz

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி’ என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு “திதி’ கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.) அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் […]

zzzzzzzzzzzzzzzzzzz

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன

*பிரம்ம முகூர்த்தம்* (முழுமையான விளக்கம்) *பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன❓ *அதன் சிறப்பு என்ன*❓ ● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. ● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. ● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

வழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகர்!

கோவை – ஈச்சனாரி பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள். சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்… நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

9 நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும்

1.சூரியன்:- எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வ9ருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே! சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், […]

zzzzzzzzzzzzzzzzzzz

எந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்?

✜ ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு. அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் நன்மை கிட்டும். ✜ கோவிலை வலம் வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மை கிடைப்பதாக ஐதீகம். எந்த கோவிலை சுற்றினால் பலன் : ❖ விநாயகரை நாம் ஒரு வலம் வந்து வணங்கினாலே தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு நன்மை கிட்டும், வெற்றிகள் வந்து சேரும். ❖ முருக […]

zzzzzzzzzzzzzzzzzzz

விநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* தெரிந்து கொள்வோம்!

1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை […]

zzzzzzzzzzzzzzzzzzz

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

சிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். “பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு “மகாதேவன்’ என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை “ஹர ஹர’ என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு “ஞானசம்பந்தர்’ என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக “ஹர ஹர’ நாமத்தைச் சொல்லிக் […]

zzzzzzzzzzzzzzzzzzz