பெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை?

பெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக்  கூடாது. கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது. கணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது) தலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது. பகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும். திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.

zzzzzzzzzzzzzzzzzzz

பிராணாயாமம் பற்றிய விவரம்

நமது உடலிலுள்ள வாயுக்குப் பிராணன் என்று பெயர். அதை அடக்குவது பிராணாயாமமாகும். பின்னிரண்டு மாத்திரைக் காலம் வாயுவை அடக்குவது மந்தமாகும். இருபத்துநான்கு மாத்திரைக்காலம் அடக்குவது மத்யமாகும். முப்பத்தாறு மாத்திரைக்காலமடக்குவது உத்தமமாகம். உள்ளேயிருக்கும் மூச்சை ஒருமூக்கால் விட்டுக்கொண்டே ஒர் பிராணாயாமம் செய்ய வேண்டும். அது ரேசகமெனப்படும். பிராணனை அடக்கிக் கொண்டே ஓர் பிராணாயாமம் செய்தல் வேண்டும். அது கும்பகமெனப்படும். மற்றோர் மூக்கால் வாயுவை உள்ளே இழுத்துக்கொண்டே ஓர் பிராணாயாமம் செய்வது பூரகமெனப் படும். பூரகம் கும்பகம் ரேசகம் என்ற […]

zzzzzzzzzzzzzzzzzzz

தீபமேற்றும் ஸ்லோகம்

கோயில்,நதிகரை,கோசாலை,மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால்,ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்…… மனதில் சாந்தியும்,புத்தியில் தெளிவும் பிறக்கும்…… தீபமேற்றும்போது,இந்தஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது., சகல செல்வங்கலும் பெட்று இன்புட்று வாழலாம் 1+ ஆத்ம சைதன்ய ரூபாந்தாம் ஆத்யாம் சக்திம் மகேஷ்வரி ஹ்ரீகார ருபினீம் தேவி வந்தே ஜோதிஸ்வ ரூபினி 2= அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம் ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், நெருப்பு,சூரியன்,சந்திரன் ஆகிய மூன்று […]

zzzzzzzzzzzzzzzzzzz

தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்

தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை  அவை பின்வருமாறு ..   திருவெண்காடு – வீராசனர் திருமாந்துறை – யோக வீராசனர் கும்பகோணம் – கங்கா கிருபாகரன் திருவையாறு – குருபரர் திருவீழிமிழலை – பத்மபாதர் திருவாரூர் – ஜகத் வீராசனர் மாங்குடி – குரு உபதேசர் கஞ்சனூர் – அக்னி தட்சிணாமூர்த்தி கருவிலி – பவ அவுஷதர் ஆலங்குடி – மகா தட்சிணாமூர்த்தி […]

zzzzzzzzzzzzzzzzzzz

சிவராத்திரியில் காலங்கள் தோறும் இறைவனுக்குச் செய்யு வேண்டிய அபிஷேக ஆராதனை முறைகள்

முதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் பாராயண்ம் இரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம். மூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம். நான்காம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?

ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். இநத நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்ளும் நவிர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க்கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்…..

zzzzzzzzzzzzzzzzzzz

கோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன்

கோயிலில் உள்ள கோபுரங்களைவிட இது உயர்ந்ததாக இருக்கும். ஆலயத்தின் முகப்பில் உள்ள இக்கோபுரம் “ஸ்தூல லிங்கம்” எனப்படும். தொலைவில் உள்ளோரும் கண்டு கைகூப்பித் தொழத்தக்கதாக அமைந்துள்ள இக்கோபுரத்தின் அமைப்பு 3,5,7,9,11, எண்ணும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இக்கோபுரத்தில் பல்வகை வடிவங்களும் சிற்பங்களாக  இடம் பெறும். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாக இக்கோபுரம் திகழ்வதால். ஆகம அடிப்படையில் அமைவதால். எல்லாவகையான நிலையுடைய சிற்பங்களும் இக்கோபுரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோபுரத்தைத் தொலைவில் காணும் போதே கைகூப்பித் தொழுதல் வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

கேதார கெளரி விரத நோன்பின்போது 21 என்ற எண்ணிக்கையில் அதிரசங்களையும் மற்றப் பொருள்களை வெற்றிலை பாக்கு மஞ்சள் பூ யும் வைத்துப் படைப்பதன் நோக்கம் யாது

பிருங்கி என்னும் மகரிஷி பெருமானை வணங்க வந்த போது அவர் அம்மையபராக இருந்த கோலங்கண்டு வண்டு உருவங்கொண்டு அவர்களுக்கு இடையிற் புகுந்து இறைவனை மட்டும் வலம் வந்தார். இதைக்கண்ட உமாதேவி இறைவனை விரதமிருந்து நோற்று அவருடம்பிலிருந்து பிரிக்கமுடியாதவாறு இடப்பாகத்தில் ஒன்றியிருக்கும் பேற்றினைப் பெற்றார். இவ்வடிவமே அர்த்த நாரீசுவரராகும். இந்த நோன்பு விதமே கேதார கெளரி விரதம் எனப்படும். புரட்டாசி மாதம் வளர்பிறைல் தசமி திதி நாள் தொடங்கி, ஐப்பசிமாதம் தேய்பிறை அமாவாசை- தீபவளி வரை 21 நாள்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

காசி,கயையாத்திரை சென்று வந்தவர்கள் ஏதேனும் ஒரு காய். கனியை உண்ணாமல் விட்டுவிடுவதன் கருத்து யாது

காசியைப் போல் கயாவும் முக்கியத் தலமாகும், யாத்திரை புரிவோர் எல்லாத் தலங்களுக்கும் போக இயலாதவர்கள் பிரயாகை, காசி, கயை என்ற இந்த மூன்றையும் தவறாமல் சேவிக்க. அதாவது பிரயாகையில் சவுளஞ் செய்து கொள்ள (முடி வாங்கிக் கொள்ள) வேண்டும்; காசியில் விசுவநாதரை நன்கு வணங்க வேண்டும்; கயையில் பிதிர்களுக்குப் பிண்டம் போட வேண்டும். கயையில் பிண்டந்தான் பிரதானம். கயாசுரன் என்பவன் சிறந்த நாராயண பக்தன். அவன் இருந்து தவஞ்செய்து நற்கதி பெற்றதனால் இத்தலம் தூய்மை பெற்றது. அதனால் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில் உள்ளே இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கலாமாகூடாதாஏன்

ஆலய ஆகமவிதிப்படி கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் நந்தி இருக்கும் இட்த்திற்கும் இடையில் நின்று வணங்குதல் கூடாது. காரணம், ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னல் உள்ள நந்தி, மூக்கிலிருந்து விட்ம் மூச்சுக் காற்றினால் தான் கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவருக்கு உயிர்நிலை தருவதாக்க் கருத்து, இதனால்தான் மூலவரின் வயிற்றுப் பகுதி-கொப்பூழ் (தொப்புள்) பாகத்தை உயிர்நிலையாகக் கொண்டு அந்த இட மட்ட்த்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு ஆலயங்களில் நந்தி அமைக்கப் படுகிறது. இம்மூச்சுக் காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவதும், […]

zzzzzzzzzzzzzzzzzzz