அரசமரமும் வேம்பும் உள்ளா இட்த்தில் விநாயகர் ஆலய முள்ளது. அதை பிரதக்ஷிணம் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளதா யார் செய்வது

இந்துக்கள் யார் வேண்டுமானாலும் பிரதக்ஷிணம் செய்யலாம். ஸ்நானம் செய்து மடியாக, ஆண்கள் விபூதியிட்டு, பெண்கள் குங்கும்மிட்டு காலை எட்டு மணிக்குள் ஏழு பிரதக்ஷிணமாவது செய்ய வேண்டும். எள், வெல்லம் நிவேதனம் செய்யலாம். சனிக்கிழமைகளில் மட்டும் அவசியம் பிரதக்ஷிணம்  செய்வது நல்லது. காலை எட்டு மணிக்குப்பிறகு அரசமரத் தடிக்குப் போக்க்கூடாது.

zzzzzzzzzzzzzzzzzzz

அபிஷேகம் ஏன் செய்யப்படுகின்றது

நாம் உயிர் வாழக்கூடிய ஆத்மாக்கள் வாழ்வில் சுகமாக வாழ்வதற்கு பரமாத்மாவை வேண்டி கிரிகைகளால் வழிபாடு செய்கிறோம். கோயிலில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம். நிவேதனம், பூசை, விழா முதலியவை நடைபெற வேண்டும். சிவனுக்கு அபிஷேகத்தில் அதிக விருப்பம். மகாவிஷ்ணுக்கு அலங்காரத்தில் அதிக விருப்பம் அபிஷேகப் பொருள்களால் பரமனைக் குளிரச் செய்தால் நமது துயரமெல்லாம் நீங்கும்.

zzzzzzzzzzzzzzzzzzz