திருநீறின் மகிமை… சிவபெருமானே நினைத்து திருநீறு பூசியதால்.. நிகழ்ந்த அற்புதம்… கதையைப் பார்ப்போமா…?


Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106

திருநீறு

மகிமை பற்றி ஒரு சிறிய கதையை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு பூசி பித்ருலோகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்டவர்கள் மரியாதை நிமித்தமாக அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாச முனிவர் செல்லும் வழியில் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணறை நான் பார்த்ததே இல்லையே என்ற சிந்தனையுடன் ஒரு கணம் கண்களை சுருக்கி எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெரிய கிணறு பக்கத்தில் ஒரு கிராமம் இயங்கிக் கொண்டிருந்தது. அதில் கடும் தீயும், அமில மழையும், பாம்பு ,தேள் போன்ற விஷ ஜந்துக்களும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் அங்க கடுமையாக தண்டிக்கப்பட்டு கொண்டிருந்தனர். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்து விட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. நகரமாக இருந்தது சொர்க்கமாக மாறியது.

பாம்புகளும் தேள்களும், மலர்மாலைகள் ஆகின. அமில மழையானது ஆனந்த மழையாகப் பொழிந்தது. இதமான தென்றல் காற்று வீச தொடங்கியது. நகரம் முழுக்க நறுமணம் வீசியது. பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த நபர்கள் இதனை கண்டு அஞ்சி எமனிடம் ஓடினர். திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நகரத்தைப் பற்றி சொன்னார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எமனும் இது எவ்வாறு சாத்தியம் ஆகியது, என்று நினைத்து இந்திரனிடம் ஓடினான். இந்திரனுக்கும் புரியவில்லை.

தேவேந்திரர்கள், தேவாதி தேவர்கள் அனைவரும் சர்வேஸ்வரன் இடம் ஓடினர். ஈசன் சிரித்துக்கொண்டே இந்த திருநீரை நடு விரல் , மோதிர விரல், ஆட்காட்டி விரல்களால் எடுத்து நெற்றி நிறைய மூன்று கோடுகளாக அணிய வேண்டும். மோதிர விரல் பிரம்மனையும், நடுவிரல் விஷ்ணுவையும், ஆட்காட்டி விரல் என்னையும் குறிக்கும். சாஸ்திரப்படி திருநீறு அணிந்த துர்வாசரும் கிணற்றை குனிந்து பார்க்கும் போது அவரது நெற்றியில் இருந்த சிறு துளி திருநீறு உள்ளே விழுந்ததால் அது சொர்க்கமாக மாறிப் போனது.

Posted in மட்றவை.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *