இவ்வருடத்தில் முக்கிய பஞ்சாங்க குறிப்புகள்
*_கார்த்திகை: 𝟭𝟬_*
*_புதன் -கிழமை_*
*_𝟮𝟲•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟱_*
*_ராசி- பலன்கள்_*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : கையிருப்புகள் மேம்படும்.
⭐️பரணி : வசதிகள் அதிகரிக்கும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
⭐️ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களை பொறுமை வேண்டும். ஒப்பந்த பணிகளில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️திருவாதிரை : பொறுமை வேண்டும்.
⭐️புனர்பூசம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
⭐️பூசம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
⭐️ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூரம் : ஆதரவான நாள்.
⭐️உத்திரம் : தாமதங்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
நினைத்த பணிகளை முடிப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நவீன யுக்திகள் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். துன்பம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐️உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️அஸ்தம் : மாற்றம் ஏற்படும்.
⭐️சித்திரை : முடிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். உற்சாகம் பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️சுவாதி : லாபங்கள் ஏற்படும்.
⭐️விசாகம் : ஆர்வமின்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️கேட்டை : தைரியம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : விவேகம் வேண்டும்.
⭐️உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தோற்றப்பொழிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. சாந்தம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.
⭐️திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️அவிட்டம் : உழைப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️சதயம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வகைகளால் லாபம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : மதிப்புகள் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*