Tag Archives: மட்றவை
வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது
வருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.
zzzzzzzzzzzzzzzzzzzரத சப்தமி நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராடுவது ஏன்
தை மாதம் வளர்பிறை சப்தமி நாளில் சூரியபகவான் உண்டானார். அவர் பிறந்த திதியான ஏழு (சப்தமி) என்பதில் அவருக்குப் பிரியம் அதிகம். அவர் உடலை வடிவமாக்கிப் பிடித்த பொழுது அது சிந்தின இடத்தில் எருக்கஞ் செடி உண்டானது. எனவேதான் சூரியன் வழிபடுகினற நாளாகிய (சூரியபூஜை) ரதசப்தமி நாளில் எருக்கன் இலைகளை 7ஐ தலைமீதுவைத்து அப்பெருமானைத் துதித்து நீராடினால் ஏழு ஜன்ம பாவங்களும் அகலும் என்பது சமய மரபு-
zzzzzzzzzzzzzzzzzzzபசுவும் புண்ணியங்களும்
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். * பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். * பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர். * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் […]
zzzzzzzzzzzzzzzzzzzதர்ப்பணம் ஸ்ராத்தம் (திதி.திவஸம்)தகவல்கள்
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது. 3. […]
zzzzzzzzzzzzzzzzzzzதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன?
தெரிந்து கொள்ள வேண்டி விஷயம் தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன? பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது […]
zzzzzzzzzzzzzzzzzzzபாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.அவை:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. […]
zzzzzzzzzzzzzzzzzzz”நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்?
உடம்பை விட்டு விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம், திதி, படையல் இதெல்லாம் ஏதோ பரோபகாரம் என்றால் ஸரி தான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் கட்டைக்கு எதற்கு ஸம்ஸ்காரம்? மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்து வி ட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருக்கிறது. அவரவர் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் […]
zzzzzzzzzzzzzzzzzzz“நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்”
“நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்” என்பது, நம் முன்னோர்களின் நம்பிக்கையுடன் கூடிய சொல்வழக்கு. நந்தியெம்பெருமாள் கயிலையில் சிவபெருமானின் வாயிற்காவலனாக இருப்பவர். திருமழபாடி என்னும் தலத்தில் அவதரித்தவர். திருவையாற்றீசன் ஐயாறப்பர்மீது மிகுந்த பக்திகொண்டவர் சிலாத முனிவர். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தும் புத்திரப் பேறின்மையால் வருந்திய முனிவர், ஐயாறப்பரை வழிபட்டு அருந்த வமியற்றினார். முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், “சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது, பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் […]
zzzzzzzzzzzzzzzzzzzதமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள்
தெரியுமா_உங்களுக்கு!!! 1 நற்றோன்றல் – பிரபவ 2 உயர்தோன்றல் – விபவ 3 வெள்ளொளி – சுக்கில 4 பேருவகை – பிரமோதூத 5 மக்கட்செல்வம் – பிரசோற்பத்தி 6 அயல்முனி – ஆங்கிரச 7 திருமுகம் – ஸ்ரீமுக 8 தோற்றம் – பவ 9 இளமை – யுவ 10 மாழை – தாது 11 ஈச்சுரம் – ஈஸ்வர 12 கூலவளம் – வெகுதான்ய 13 முன்மை – பிரமோதி 14 நேர்நிரல் […]
zzzzzzzzzzzzzzzzzzzசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21
சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம். 1.உல்கா: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது. 2.பூகம்பம்: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது. 3.உபாகம்: சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு […]
zzzzzzzzzzzzzzzzzzz