Tag Archives: பெண்கள்
பெண்கள் திருமாங்கல்யச்சரட்டினை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்
திருமாங்கல்யச் சரடு நூலிழை ஒன்று பிரிந்தாலும், சனி, செவ்வாய்க்கிழாமையில்லாத மற்ற நாள்களில் ராகுகாலம் மரண யோகம் இல்லாத வேளைகளில் வேறு மாங்கல்யச்சரட்டினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். (மாங்கல்யச்சரடு மஞ்சள் கயிற்றில் இருப்பதே சிறந்தது)
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா கூடாதா விளக்கம்.
அட்டாங்க நமஸ்காரம் ஆண்களுக்கும், பஞ்சாங்க (பஞ்ச+அங்க) நமஸ்காரம் பெண்களுக்கும் உரியன. தலைக்கு மேல் கைகளை உயர்த்துதல்-நீட்டுதல் என்பது அட்டாங்க நமஸ்காரத்தில் இடம் பெறவில்லை, பெண்களுடைய உடலமைப்பை யொட்டியே அவர்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரம் விதிக்கப் பட்டுள்ளது. ஆகவே பெண்கள் தலைக்குமேலே இருகைகளையும் உயர்த்திக் குவித்து வணங்கலாகாது. மார்புகு நேரே கைகளைக் குவித்து வணங்குவதே பொருத்தமானதாகும்.
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை?
பெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது. கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது. கணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது) தலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது. பகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும். திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.
zzzzzzzzzzzzzzzzzzz