Category Archives: Uncategorized
நமக்கு தெரிந்த கோவில்கள்! நமக்கே தெரியாத அதிசயங்கள்
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் […]
zzzzzzzzzzzzzzzzzzzபிராணாயாமம் பற்றிய விவரம்
. நமது உடலிலுள்ள வாயுக்குப் பிராணன் என்று பெயர். அதை அடக்குவது பிராணாயாமமாகும். பின்னிரண்டு மாத்திரைக் காலம் வாயுவை அடக்குவது மந்தமாகும். இருபத்துநான்கு மாத்திரைக்காலம் அடக்குவது மத்யமாகும். முப்பத்தாறு மாத்திரைக்காலமடக்குவது உத்தமமாகம். உள்ளேயிருக்கும் மூச்சை ஒருமூக்கால் விட்டுக்கொண்டே ஒர் பிராணாயாமம் செய்ய வேண்டும். அது ரேசகமெனப்படும். பிராணனை அடக்கிக் கொண்டே ஓர் பிராணாயாமம் செய்தல் வேண்டும். அது கும்பகமெனப்படும். மற்றோர் மூக்கால் வாயுவை உள்ளே இழுத்துக்கொண்டே ஓர் பிராணாயாமம் செய்வது பூரகமெனப் படும். பூரகம் கும்பகம் ரேசகம் […]
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா கூடாதா விளக்கம்.
அட்டாங்க நமஸ்காரம் ஆண்களுக்கும், பஞ்சாங்க (பஞ்ச+அங்க) நமஸ்காரம் பெண்களுக்கும் உரியன. தலைக்கு மேல் கைகளை உயர்த்துதல்-நீட்டுதல் என்பது அட்டாங்க நமஸ்காரத்தில் இடம் பெறவில்லை, பெண்களுடைய உடலமைப்பை யொட்டியே அவர்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரம் விதிக்கப் பட்டுள்ளது. ஆகவே பெண்கள் தலைக்குமேலே இருகைகளையும் உயர்த்திக் குவித்து வணங்கலாகாது. மார்புகு நேரே கைகளைக் குவித்து வணங்குவதே பொருத்தமானதாகும்
zzzzzzzzzzzzzzzzzzzபெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை
பெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது. கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது. கணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது) தலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது. பகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும். திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.
zzzzzzzzzzzzzzzzzzzகோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன்
கோயிலில் உள்ள கோபுரங்களைவிட இது உயர்ந்ததாக இருக்கும். ஆலயத்தின் முகப்பில் உள்ள இக்கோபுரம் “ஸ்தூல லிங்கம்” எனப்படும். தொலைவில் உள்ளோரும் கண்டு கைகூப்பித் தொழத்தக்கதாக அமைந்துள்ள இக்கோபுரத்தின் அமைப்பு 3,5,7,9,11, எண்ணும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இக்கோபுரத்தில் பல்வகை வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெறும். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாக இக்கோபுரம் திகழ்வதால். ஆகம அடிப்படையில் அமைவதால். எல்லாவகையான நிலையுடைய சிற்பங்களும் இக்கோபுரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோபுரத்தைத் தொலைவில் காணும் போதே கைகூப்பித் தொழுதல் வேண்டும்
zzzzzzzzzzzzzzzzzzz