08-05-2025 ராசி பலன்

👉Web site: –http://www.MBarchagar.com

👉Whatsapps Group:- https://chat.whatsapp.com/J0Q6lZIrV23IL2VGTtkj7r

       *_சித்திரை: 𝟮𝟱_*

      *_வியாழன் -கிழமை_*

            *_𝟬𝟴•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱_*

       *_ராசி- பலன்கள் _*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்.

⭐️அஸ்வினி : கையிருப்புகள் அதிகரிக்கும்.

⭐️பரணி : தேவைகள் நிறைவேறும்.

⭐️கிருத்திகை : சோர்வுகள் விலகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*

முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : தாமதங்கள் விலகும்.

⭐️ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️மிருகசீரிஷம் : கனவுகள் பிறக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

⭐️புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*

எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : விவேகம் வேண்டும்.

⭐️பூசம் : திருப்பங்கள் ஏற்படும்.

⭐️ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*

குடும்பத்தில் பொறுப்புக்கள் உயரும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மகம் : பொறுப்புக்கள் உயரும்.

⭐️பூரம் : லாபகரமான நாள்.

⭐️உத்திரம் : கவலைகள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெற்றி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️உத்திரம் : தடுமாற்றம் ஏற்படும்.

⭐️அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.

⭐️சித்திரை : மதிப்பளித்து செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*

பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். மாற்றம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : பயணங்கள் ஏற்படும்.

⭐️சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.

⭐️விசாகம் : மதிப்பு மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*

மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : புத்துணர்ச்சி பிறக்கும்.

⭐️அனுஷம் : வசதிகள் அதிகரிக்கும்.

⭐️கேட்டை : சேமிப்புகள் மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : நெருக்கடிகள் குறையும்.

⭐️பூராடம் : லாபம் மேம்படும்.

⭐️உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இழுபறியான சுப காரியம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️உத்திராடம் : தன்னம்பிக்கையான நாள்.

⭐️திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.

⭐️அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*

வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சமூகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளால் கையிருப்புகள் குறையும். சலனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அவிட்டம் : முடிவுகள் பிறக்கும்.

⭐️சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.

⭐️பூரட்டாதி : கையிருப்புகள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*

சுபகாரியம் சார்ந்த செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். மறதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : செலவுகள் ஏற்படும்.

⭐️உத்திரட்டாதி : மந்தநிலை நீங்கும்.

⭐️ரேவதி : ஆதாயகரமான நாள்.

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*