தமிழ் எழுத்துப்பிழை திருத்த


பயன்படுத்தும் முறை:
2000 தமிழ்ச் சொற்கள் வரை ஒரே பக்கத்தில் திருத்திக் கொள்ளமுடியும்.
இக்கருவி தானாகப் பிழைகளைத் திருத்த வேண்டுமா அல்லது சுட்டிக் காட்டினால் போதுமா என்று “சுயதிருத்தம்” என்ற தேர்வுப் பொத்தான் முலம் கட்டுப்படுத்தலாம்.
“திருத்துக” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் திருத்த ஆரம்பிக்கலாம்.
“அழி” என்ற பொத்தான் முழுவதையும் அழித்து, புதிய பயன்பாட்டிற்குத் தயார்படுத்தும்.

ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.
அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.
சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்
பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்டச் சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். “மாற்று” என்பது ஒருசொல்லை மாற்றும், “மாற்று(எ)” என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும். மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.