உருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது

உருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்

zzzzzzzzzzzzzzzzzzz

ஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும்

கிழக்கு,மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும்: தெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். (தன் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சந்நிதியும் இருத்தல் கூடாது. கொடிமரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்கினால் அங்கு எத்தெய்வச் சந்நிதியும் இருக்காது. எனவேதான் இங்குமட்டுமே வீழ்ந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் விதித்துள்ளனர்) ஆண்கல் பஞ்சாங்க நமஸ்காரம் பெண்கல் மண்டி இட்டு நமஸ்கரிக்க வேண்டும் சுபம் சுபம் சுபம்

zzzzzzzzzzzzzzzzzzz