திருவிளக்கு

*திருவிளக்கு* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. திருமணமாகி_புகுந்த_வீட்டிற்குச்

#செல்லும்_பெண்_குத்துவிளக்கை

#ஏற்றுதற்கான_காரணம்!…………

? பெண் திருமணமாகி தன் பெற்றோர், உடன் பிறந்தோர் போன்ற உறவுகளை விட்டுப் பிரிந்து தன் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அப்படி திருமணம் முடிந்து தன் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அப்பெண்ணை அந்த வீட்டில் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்வார்கள். அவ்வாறு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது ஏன்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

? ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள் ஐந்து. குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும். ஆகையால் பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று குத்துவிளக்கை ஏற்றி உறுதியளிப்பதாக அர்த்தம்.

? குத்துவிளக்கிற்கென்று ஒரு விளக்கம் உள்ளது. குத்து விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் ஐந்து கடவுள்களைக் குறிக்கின்றது. அதாவது குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும், குத்துவிளக்கின் நடுத்தண்டு பகுதி – விஷ்ணுவையும், நெய் எறியும் அகல் – சிவனையும், திரி தியாகத்தையும், தீபம் – திருமகளையும், சுடர்- கலைமகளையும் குறிக்கிறது.

? ஆகையால் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண், புகுந்த வீட்டில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணுடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், புகுந்த வீட்டிற்கு வந்த புதுமணப்பெண்ணை முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்கிறார்கள்.

? அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக, தனது கணவனின் வீட்டிற்கு வந்தவுடன், முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடு முழுவதும் ஒளிபரவச் செய்கின்றனர். இதுவே திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண் முதலில் குத்துவிளக்கை ஏற்றுதற்கான காரணம் ஆகும்…. நன்றி…

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *