நீ…நீ….நீ…. என்பது? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* முடிவில் ஒரு பிடிக்குள் சாம்பலாய் உன்னை அடக்கிய பின்னும் கூட இந்த உலகம் உன்னை வைத்துக் கொள்ள விரும்பாமல் நீரில் கரைத்து விடுகிறது. ‘நீ’ என்பது எது, ‘நீ’ என்பதற்கு இறுதியில் அடையாளம் காட்டக்கூட ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது, சில வருடங்கள் சுவற்றில் புகைப்படமாக வாழ்வாய், சில ஆண்டுகளில் அதும் சிதிலமடைந்து “முன்னோர்” என்ற உருவம் இல்லா பெயர் உனக்கு சூட்டப்படும். உன்னை கடந்து சென்ற வாகனத்தின் சப்தத்தை போல தான் இந்த உலகில் நீயும் மறைந்து போவாய்.
ஆக தோலொடு மூடிய கூரையான இந்த உடலை நம்பி பயனேதும் இல்லை. உன்னை தேடி தேடி உனக்குள்ளே ஓடு ,பலதூரம் உன்னுள் கடந்து சென்றால் உள்ள அந்த ஆழ்ந்த மௌனமே நீ யார் என்பதற்கான பதில், பிரம்மம் ஒன்றே பலவானது, ஒரு பெரிய யானைக்கு உள்ளேயும் சிறிய எறும்பின் உள்ளேயும் இருக்கும் பிரம்மம் ஒன்றே.
ஜெய் ஆதிபராசக்தி…
அ