திருப்பதி மணி

#திருமலையில்_பூஜை_தீபாராதனை

#நேரங்களில்_மணி_அடிப்பதில்லை

#அதற்கு_காரணம்_என்ன?

உங்களுக்கு தெரியுமா?அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை

ஏன் ! மேலே படியுங்கள் !:

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !.
.
குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் …
அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !

திடுக்கிட்டு கண் விழித்த அவர் , …தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ……..
திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !….

பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க …..

அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
” அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !….ஆம் …புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் …துப்புல் அனந்தசூரி – தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !….அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !”

அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே #ஸ்ரீவேதாந்ததேசிகன் !

திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,’ மணியான குழந்தையாக ‘ அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பது இல்லை,

மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது.

#ஓம்_நமோ_நாராயணா!!!

அஆ

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =