மயில் வாகனம் காரணம்

*முருகனுக்குப் பிடித்த மயில் நமக்கு சொல்லும் சூட்சும காரணம் என்ன* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…
????????
மனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன்! தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன்! தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை! அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்.

இருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது அதன் மகிழ்ச்சியும் மறையும். விரிந்த தோகையும் சுருங்கி விடும். மனித மனமும் உலகின் அற்ப சொற்ப இன்பங் களை பெரிதாய் எண்ணி அதை அடைய ஆட்டம் போடுகிறது.

அந்த இன்பங்கள் நீர்த்துப் போகும்போதும் மனம் முறிந்து போகிறான். முருகன் நம் மனம் என்னும் மேடையான மயில் வாகனத்தில் அமர்ந்து இறை அனுபவம் பெற அருள் புரிபவனாக ஆடும் மயில் மீது அமர்ந்து சுப்ரம்மண்யர் நமக்கு உணர்த்துகிறார்.

ஆகவே, நமது மனதையே அவனது வாகன மாக்கி சுத்த அறிவு அருள்பவனே சுப்ரம்மண்யன். நன்றி…

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *