ஆனந்த தான்டவம்….

#சிவன்_ஆனந்த_தாண்டவம்

#ஆடுவதற்கான_காரணம்_என்ன? ஓர் கண்ணோட்டம்….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. 9942114247….

#ஆனந்த_தாண்டவம்

சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற இந்நடனம் ஆனந்த தாண்டவம் என்று வழங்கப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது. ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. இந்நடன திருக்கோலத்தினை திருநாவுக்கரசர் “குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்” என்று பாடுகிறார்.

இந்நடனமாடியமையால் சிவனை கூத்தன் என்றும், தில்லையில் நடமாடியமையால் தில்லைக் கூத்தன் என்றும் அழைக்கின்றனர். கூத்திறைவர் என்றும், நடராசர் என்றும் ஆடல்வல்லான் என்றும் போற்றுகின்ற சிவபெருமானின் இத்தாண்டவம், மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. இந்நடனம் களிநடனம் எனவும் வழங்கப்படுகிறது.

#சிவன்_ஆனந்த_தாண்டவம்_ஆடுவதற்கான #காரணம்_என்ன?

ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார்.

அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.இந்த உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார்.

அப்போது, அவர் உள்ளத்தில் கருணை பொங்கும், மீண்டும் உயிர்களைப் படைக்க முடிவெடுப்பார். எனவே மகிழ்ச்சியில் நடனம் புரிவார். அதையே ‘ஆனந்த தாண்டவம்’ என்பர். சிவன் நடனமாடும் போது ‘நட(ன)ராஜர் என்ற பட்டப்பெயர் பெறுவார்…

#ஓம்_சிவாயநமஹ …!!! நன்றி…

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *