சத்திய நாராயண பூஜை ஓர் கண்ணோட்டம்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை அனுஷ்டிக்கப்படும் பூஜை தான் சத்திய நாராயண பூஜை.

இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலிய நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைத்து, ஆவாகனம் செய்ய வேண்டும்.

வேலைக்கு செல்பவர்கள் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டு மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணபதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.

துளசி, மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சிக்கலாம். வணங்கிய பிறகு இரவு உணவு எடுத்து கொள்ளலாம். வீட்டில் சத்திய நாராயண பூஜையை செய்ய முடியாதவர்கள் கோவில்களில் நடத்தப்படும் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம். கணவன், மனைவி இருவரும் அனுஷ்டிக்கும் பூஜை இது.

இந்த பூஜை செய்வதனால் துன்பங்கள் விலகி குடும்பத்தில் சுபிட்சமும் சேரும் என்பது முதியோர் வாக்கு. இந்த பௌர்ணமி சித்திரை மாதத்தில் வரும் போது சித்திரா பௌர்ணமி என்று சிறப்புப் பெறுகிறது.

இதை அம்மன் கோவிலில் மிகப் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். மாதந்தோறும் பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், சித்ரா பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜையை முடித்துவிட்டு, மஹாவிஷ்ணு – மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வணங்கிய பிறகு, தங்களால் முடிந்த வரை, சித்ரான்னம் தானம் செய்யலாம்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று நற்கதி அடைவர் என்பது நிச்சயம். நன்றி…

ஆசிரியர்:-அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* ph…9942114247….

Posted in மஹாவிஷ்னு and tagged .

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan