இனிப்பு… கசப்பு…

இனிப்பு… கசப்பு… மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவருட்பயனில் ‘உயிர் விளக்கம்’ என்ற தலைப்பில் வரும் பாடல்:

“தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின். ”

இதற்கு உரையாசிரியர் சிவஸ்ரீ.கு.சுந்தரமூர்த்தியார் தரும் தெளிவுரை,

“பித்த நோயுடையார் தம் நாக்கிற்குத் தித்திக்கும் பாலும் கசப்பாக இருக்கும்;அப்பித்த நோயினின்றும் நீங்கிய பின் நாவிற்கு முன் கசப்பாக இருந்த பால், தித்திக்கத் தக்கதாகத் திருந்திவிடும்.அவ்வாறே உயிர், மலஇருள் உற்றிருக்கும் பொழுது,இறைவனது மறைப்பாற்றல்(திரோதான சத்தி) கசப்பாக இருக்கும்.அம்மல இருள் நீங்கிய பொழுது, அக்கசப்பான மறைப்பாற்றலே இனிக்கும் என்பதாம்.

இது ‘ஒட்டணி’யாம்.பித்த நோயின்றி நன்கிருக்கும் நாவிற்குப் பாலின் இனிமை நன்கு விளங்குதல் போல, மலப்பிணிப்பின்றி இருக்கும் உயிர்க்கு இறைவனது அருட்சத்தியின் இனிமை நன்கு விளங்கும் என்பது இதன் கருத்தாகும்!” நன்றி…

ஆசிரியர்:-* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…9942114247…. …….

Posted in மட்றவை and tagged .

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *